கல்முனை பிரதான வீதியின் கோட்டைக்கல்லாறு பாலத்தில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தும், கனரகவாகனம் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த விபத்தானது நேற்று (07.01.2024) மாலை இடம்பெற்றுள்ளது.
மட்டக்களப்பிலிருந்து கல்முனை நோக்கி பயணித்த பேருந்தும், கல்முனை இருந்து தம்புள்ளை நோக்கி பயணித்த கனரக வாகனமுமே இவ்வாறு நேருக்குநேர் மோதியுள்ளது.
மேலதிக விசாரணை
இதன்போது பேருந்திலிருந்த சில பயணிகள் சிறு காயங்களுடன் உயிர்தப்பியுள்ளதோடு, கனரகவாகத்தில் பயணித்த சாரதி காயங்களுடன் களுவாஞ்சிகுடி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிகுடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.