பிரதீப் ரெட் கார்டு குறித்த கேள்வி.. பதில் சொல்ல தெரியாமல் தடுமாறிய பூர்ணிமா

120

 

பிக் பாஸ் 7 மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான நட்சத்திரங்களில் ஒருவர் பிரதீப் ஆண்டனி. இவர் குறைவான நாட்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்தாலும் கூட ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துவிட்டார்.

இவரை எவிக்ட் செய்தது தவறு என ஒரு பக்கம் கூறினாலும், மறுபக்கம் அப்படி செய்தது சரி தான் என்றும் கூறி வருகிறார்கள்.

பிரதீப்பிற்கு ரெட் கார்டு கொடுக்கலாம் என கூறிய பலரும், பிக் பாஸ் வீட்டிலிருந்து எவிக்ட் ஆன பிறகு, இந்த சர்ச்சைக்கு பதில் கூறி வருகிறார்கள்.

தடுமாறிய பூர்ணிமா
அந்த வரிசையில் ரூ. 16 லட்சம் பணப்பெட்டியுடன் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய பூர்ணிமா இடமும் இந்த கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

ஆனால், அதற்கு பூர்ணிமா கூறியது ‘நான் யாருக்கும் பதில் சொல்லவேண்டியது இல்லை. ஒரு நாள் இது எல்லாருக்கும் புரியும். அப்போ எல்லாமே எல்லாருக்கும் தெரியும்’ என பேசினார்.

கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் பூர்ணிமா தடுமாறியுள்ளார். பதில் சொல்லாமல் மழுப்பிவிட்டார் என ரசிகர்கள் கூறி வருகிறார்கள். அந்த வீடியோவும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

SHARE