இந்தியாவை பற்றி பேசுவதைப் பார்க்கும்போது வருத்தமாக இருக்கிறது: ஹர்திக் பாண்டியா எடுத்த முடிவு

136

 

மாலத்தீவு நெட்டிசன்கள் இந்தியாவுக்கு எதிராக இனவெறி கருத்துக்களை பதிவிட்டு வரும் நிலையில், இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா தனது கருத்தினை தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி லட்சத்தீவுக்கு சுற்றுலா செல்லுங்கள் என்று வெளியிட்ட பதிவினைத் தொடர்ந்து, மாலத்தீவு நெட்டிசன்கள் இந்தியர்களுக்கு எதிரான கருத்துக்களை தெரிவித்தனர்.

இந்த விடயம் இணையத்தில் விஸ்வரூபம் எடுத்துள்ளது. முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா, ஹிந்தி நடிகர் அக்ஷய் குமார் ஆகியோர் மாலத்தீவினை புறக்கணியுங்கள் என்று தங்கள் கருத்துக்களை பதிவிட்டனர்.

இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் அணி வீரர் ஹர்திக் பாண்டியா தனது வேதனையை பதிவிட்டுள்ளார்.

அவரது பதிவில், ‘இந்தியாவைப் பற்றி பேசுவதைப் பார்க்கும்போது மிகவும் வருத்தமாக இருக்கிறது. அதன் அழகிய கடல்வாழ் உயிரினங்கள், அழகான கடற்கரைகள், லட்சத்தீவுகள் சரியான இடமாக உள்ளது. மேலும் எனது அடுத்த விடுமுறைக்கு கண்டிப்பாக நான் பார்க்க வேண்டிய இடமாகும்’ என தெரிவித்துள்ளார்.

அத்துடன் அவர் ”நம்ப முடியாத இந்தியாவை ஆராயுங்கள்” எனவும் குறிப்பிட்டார்.

SHARE