இஸ்ரேலின் வான்வழி தாக்குதலில் கொல்லப்பட்ட ஹிஸ்புல்லா பயங்கரவாத தலைவர்!

110

 

இஸ்ரேலின் வான்வழி தாக்குதலில் ஹிஸ்புல்லா பயங்கரவாதக் குழுவின் தளபதி பலியாகியுள்ளதாக லெபனான் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இஸ்ரேல் தனது வடக்கு எல்லைக்குள் ஊடுருவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளதாகவும் இஸ்ரேல் எல்லையில் இருந்து 9 கி.மீ தொலைவில் உள்ள தெற்கு லெபனானில் உள்ள கிர்பெட் செல்ம் என்ற கிராமத்தில் நடந்த தாக்குதலில் அவர் கொல்லப்பட்டதாக லெபனான் பாதுகாப்பு அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இது தொடர்பில் ஹிஸ்புல்லா தரப்பில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. தெற்கு லெபனானில் உள்ள ஹிஸ்புல்லாவின் கட்டுமானங்கள் தாக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளது.

இஸ்ரேலின் ஹிஸ்புல்லா நிலைகள் மீதான தாக்குதலில் இதுவரை குறைந்தது 150 பயங்கரவாதிகள் பலியாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

SHARE