வெளிவந்து 5 வருடங்கள் ஆகும் அஜித்தின் விஸ்வாசம் படத்தின் மொத்த வசூல்.. எவ்வாளவு தெரியுமா

125

 

அஜித்தின் திரை வாழ்க்கையில் மிகப்பெரிய மயிலக்கல்லை தொட்ட திரைப்படம் விஸ்வாசம். சிறுத்தை சிவா – அஜித்தின் வெற்றி கூட்டணியில் உருவான நான்காவது படம் இது.

கிராமத்து கதைக்களத்தில் மாஸ், ஆக்ஷன், ட்ராமா கதைக்களத்தில் பட்டையை கிளப்பி இருப்பார் அஜித். டி. இமான் இசையில் உருவான இப்படத்தை சத்யஜோதி தியாகராஜன் தயாரித்திருந்தார்.

கடந்த 2019ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளிவந்த இப்படம் உலகளவில் மாபெரும் வசூல் சாதனையை படைத்தது.

இந்நிலையில், இன்றுடன் விஸ்வாசம் திரைப்படம் வெளிவந்து 5 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நிலையில் #5yearsofviswasam என ரசிகர்கள் டிரெண்ட் செய்து வருகிறார்கள்.

விஸ்வாசம் படத்தின் வசூல்
இந்நிலையில், 5 ஆண்டுகளை கடந்து மக்கள் மனதில் இருந்து நீங்கா இடத்தை பிடித்துள்ள அஜித்தின் விஸ்வாசம் திரைப்படம் உலகளவில் கிட்டத்தட்ட ரூ. 200 கோடி வரை வசூல் செய்து பாக்ஸ் ஆபிசில் சாதனை படைத்தது.

ரூ. 200 கோடி வரை வசூல் செய்தது மட்டுமின்றி இப்படம் மிகப்பெரிய லாபத்தை தயாரிப்பாளருக்கு கொடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE