ரணில் விக்ரமசிங்கவிற்கு நோபள் விருது வழங்கப்பட வேண்டுமென ராஜாங்க அமைச்சர் டயனா கமகே தெரிவித்துள்ளார்.
நாட்டை பொருளாதார நெருக்கடி நிலையிலிருந்து மீட்டமைக்காக இவ்வாறு விருது வழங்கப்பட வேண்டுமென தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
பொருளாதார நெருக்கடிகள்
நாடு பாரிய பொருளாதார நெருக்கடி நிலையில் சிக்கியிருந்த காலத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாட்டை பொறுப்பேற்றிருந்தார் .
இவ்வாறான ஓர் பின்னணியில் நாடு எதிர்நோக்கிய பொருளாதார நெருக்கடிகளிலிருந்து மீட்டமைக்காக அவருக்கு நோபள் விருது வழங்கப்பட வேண்டுமென டயனா கமகே தெரிவித்துள்ளதாக தெற்கு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும், கஞ்சா செய்கை, தகாத தொழில் போன்றவற்றை சட்ட ரீதியாக்க வேண்டும் என கடந்த காலங்களில் டயனா குரல் கொடுத்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.