தமிழர்கள்ளுக்கு சமமான நீதி கிடைக்கவில்லை-நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன்

114

 

தமிழர்கள் தங்கள் நாட்டுக்கு விசுவாசமாக இருக்கிறார்கள் ஆனால் அவர்களுக்கு சமமான நீதி கிடைக்கவில்லை என்று நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.சென்னையில் இன்று(11.01.2024) ஆரம்பமான 2024 ஆம் ஆண்டுக்கான உலகத் தமிழ் புலம்பெயர் தினத்தின் முதல் நாளில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

தமிழர்களுக்கு சமமான நீதி
அவர் மேலும் தெரிவிக்கையில்,

“தமிழர்கள் – ஈழத் தமிழர்கள் மற்றும் மலையகத் தமிழர்கள் – சமமாக நடத்தப்படுவதில்லை. எனினும் தமிழர்கள் தாம் குடியேறும் நாடுகளுக்கு விசுவாசமாக இருக்கிறார்கள்.

தமிழர்களுக்கு சமமான நீதி கிடைக்காத இலங்கையைத் தவிர அனைத்து நாடுகளும் தமிழர்களின் விசுவாசத்தை ஏற்றுக்கொள்கின்றன.

இந்தநிலையில் அனைவருக்கும் நீதி என்பதே தமிழகத்தில் திராவிட ஆட்சியின் அடையாளமாகும் ஏனவே தமிழக அரசாங்கம், இலங்கை அரசாங்கத்துக்கு ஆதரவை வழங்கவேண்டும்” என கோரிக்கை விடுத்துள்ளார்.

SHARE