பொருளாதார வீழ்ச்சிக்கு காரணமான ராஜபக்ச குடும்பத்தினரை பாதுகாப்பதில் ரணில் விக்ரமசிங்க வெற்றியடைந்துள்ளார் என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்றையதினம்(11) இடம்பெற்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாட்டினுடைய பொருளாதாரத்தை பாதுகாப்பதற்கும், மீட்டெடுப்பதற்கும் பதிலாக சொந்த மக்களினால் விரட்டியடிக்கப்பட்ட ராஜபக்சக்களையும், மொட்டுகட்சியையும் பாதுகாப்பதற்காகவே தீவிரமாக செயற்பட்டு கொண்டிருக்கின்றார்.
இச்செயற்பாடு நாட்டினுடைய அழிவுக்கு மேலும் அடித்தளம் அமைப்பதாகவே அமைந்திருக்கின்றது என்றும் தெரிவித்துள்ளார்.