ஸ்பெயினில் மீண்டும் முகக்கவசம் அணிய வலியுறுத்து

189

 

ஐரோப்பிய நாடான ஸ்பெயினில் நாட்டில் காய்ச்சல், கொரோனா மற்றும் பிற சுவாச நோய்கள் அதிகரித்து வருவதால், வியாழக்கிழமை (11) முதல் அனைத்து மருத்துவமனைகள் மற்றும் சுகாதார மையங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

சுகாதார வசதிகள் மற்றும் மருந்தகங்களில் முகக்கவசங்களின் பயன்பாடு கட்டாயமாக நிறுத்தப்பட்ட ஆறு மாதங்களுக்குப் பிறகு எடுக்கப்பட்ட அரசாங்க முடிவுகள், சில பிராந்திய நிர்வாகங்களின் எதிர்ப்பை எதிர்கொண்டது.

இந் நிலையில் ஸ்பெயின் நாட்டின் வெலெனிக்கா, கடலொனியா, முர்சியா ஆகிய மாகாணங்களில் பொது இடங்களில் கட்டாயமாக முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது .

SHARE