வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் அவுஸ்திரேலிய லெவன் அணி 174 ஓட்டங்களுக்கு சுருண்டது.
3 நாட்கள் பயிற்சி ஆட்டம்
அவுஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி, 3 நாட்கள் பயிற்சி ஆட்டத்தில் விளையாடி வருகிறது.
அடிலெய்டில் நடந்து வரும் இப்போட்டியில், வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்சில் 251 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது.
அதிகபட்சமாக ஜஸ்டின் கிரேவ்ஸ் 65 (135) ஓட்டங்களும், கவெம் ஹாட்ஜ் 52 ஓட்டங்களும், கேப்டன் பிராத்வெயிட் 52 ஓட்டங்களும் எடுத்தனர்.
அவுஸ்திரேலிய லெவன் அணியின் தரப்பில் லியாம் ஹஸ்கெட் 3 விக்கெட்டுகளும், ஜேக் நிஸ்பெட் மற்றும் டாக் வர்ரென் தலா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
சரிந்த விக்கெட்டுகள்
பின்னர் தனது முதல் இன்னிங்சை அவுஸ்திரேலிய லெவன் தொடங்கியது. ஷாமர் ஜோசப், அல்சரி ஜோசப் மற்றும் கேமர் ரோச் பந்துவீச்சில் அவுஸ்திரேலியாவின் விக்கெட்டுகள் மளமளவென சரிந்தன.
தொடக்க வீரர் டிம் வார்ட் மட்டும் 50 ஓட்டங்கள் எடுக்க, ஏனைய வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர். இதனால் அவுஸ்திரேலிய லெவன் அணி 174 ஓட்டங்களுக்கு சுருண்டது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஷாமர் ஜோசப், அல்சரி ஜோசப் மற்றும் கேமர் ரோச் தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர்.
இதனைத் தொடர்ந்து, இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 16 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது.
எனினும் ஜோஷ்வா டா சில்வா 55 ஓட்டங்களும், காவெம் ஹாட்ஜ் 44 ஓட்டங்களும் எடுத்து களத்தில் உள்ளனர்.
இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் வெஸ்ட் இண்டீஸ் 3 விக்கெட் இழப்புக்கு 137 ஓட்டங்கள் எடுத்ததுடன், 214 ஓட்டங்கள் முன்னிலை பெற்றுள்ளது.