மட்டக்களப்பு மாவட்டத்தில் அடை மழை காரணமாக பாதிக்கப்பட்ட இடங்களை மாவட்ட அரசாங்க அதிபர் நேரடியாக சென்று கள விஜயம் மேற்கொண்ட போது முன்னெடுக்கப்பட்டு வரும் கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சை சம்பந்தமாக கல்வி சமூகத்தினால் எவ்வித முறைப்பாடுகள் இதுவரை கிடைக்கப் பெறவில்லை எனவும் அடைமழை காரணமாக மாவட்டத்தில் கிரான் பிரதேசத்தில் புலி பாய்ந்தகல். வாகரையில் கல்லறிப்பு சித்தாண்டில் ஈரள குளம் போன்ற இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதற்கு தற்காலிக போக்குவரத்து சேவைகள் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளதாகவும்
மாவட்டத்தில் 8 இடைத்தாங்கல் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன் இதில் 264 குடும்பங்களைச் சேர்ந்த 703 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளதுடன் அவர்களு க்கு வேண்டிய நலன்புரி திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவினால் பிரதேச செயலகங்கள் ஊடாக தங்க வைக்கப்பட்டவர்களுக்கு 3 நாட்களுக்கு தேவையான சமைத்த உணவு வழங்க ப்பட்டு வருவதாகவும் மட்டக்களப்பு மாவட்டத்தில் மொத்தமாக 11,523 குடும்பங்களைச் சேர்ந்த 39 ஆயிரத்து 38 மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகமானவர்கள் தங்களது வீடுகளில் தங்கி உள்ளதாகவும் இதுவரை வவுனதிவு பிரதேச செயலக பிரிவில் மாத்திரம் ஒரு மீனவர் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் மாவட்ட அரசாங்க அதிபர் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களது முகாம்களுக்கு நேரடி கள விஜயம் மேற்கொண்டதன் பின் மாவட்டத்தின் தற்போதைய வெள்ள நிலைமை சம்பந்தமாக ஊடகங்க ளுக்கு கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு கருத்து தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்துவந்த அடை மழை காரணமாக வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.ஜே.ஜே.முரளிதரன் 11 திகதி நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.ஏறாவூர்பற் று பிரதேச செயலக பிரிவில், ஏறாவூர் 04 இல் அமைந்துள்ள மாஞ்சோலை மணிமண்டபத்தில் தங்கியிருந்தவர்களை அரசாங்க அதிபர் சந்தித்து அவர்களது குறை நிறைகளை கேட்டறிந்துகொண்டார்.பாதிக்கப் பட்ட அனைத்து மக்களுக்கும் தேவையான வசதிகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு அரசாங்க அதிபர் இதன் போது பணிப்புரை விடுத்துள்ளார்.இவ் விஜயத்தின் போது மாவட்ட அனர்த்த நிவாரண சேவை உத்தியோகத்தர் சுரேஸ்குமார், அனர்த்த முகாமைத்துவ உத்தியோகத்தர் சத்திய சஜந்தன்,கிராம உத்தியோகத்தர் என பலர் கலந்து கொண்டனர்.