பிரபாகரன் தனது பணியாளர்களை போரில் சரணடைய அனுமதித்தது ஏன்?

89

 

தொடர்புடையவை மொத்தம் (36)
வகைப்படுத்துக பரிந்துரைக்கப்பட்டவை

ஐயா, தமிழீழத்தில் சிங்கள ராணுவத்தினர்க்கு எதிராக போரிட்டவர்கள் யாரும் பணியாளர்கள் அல்ல. தமிழீழ மக்களின் விடுதலைக்காக, தமிழீழ மக்களின் சுதந்திர வாழ்விற்காக ஒவ்வொரு குடும்பத்திலும் இருந்து, தங்களின் இனத்தின் விடுதலைக்காக தியாக உணர்வுடன், விடுதலை வேட்கையுடன் ஆயுதம் ஏந்தி போராடியவர்கள். சம்பளம், அலவன்ஸ், பதவி, என்று எதையும் எதிர்பாராது இன விடுதலைக்காக ஆயுதம் ஏந்தியவர்களை பணியாளர்கள் என்று மதிப்பீடு செய்வது ஏன்??? தமிழீழ மக்கள் தான் விடுதலைப் புலிகள் , விடுதலைப் புலிகள் தான் தமிழீழ மக்கள். மக்களும் புலிகளும் வேறு வேறு அல்ல.

ஆயுதப் போராட்டத்தின் கலாச்சாரம் என்று வரையறை செய்திடும் நீங்கள், அன்றைக்கு தமீழிழத்தில் எம் தமிழீழ மக்களுக்கு எதிராக கலாச்சார முறைப்படி தான் போர் செய்தனரா?? அல்லது சர்வதேசம் வகுத்துள்ள போரியல் முறைகளின் படி தான் போர் செய்தார்களா என்று சொல்ல முடியுமா??? எந்தவொரு ஒழுங்கும் இல்லாமல், தமிழினத்தை அழித்தால் போதுமென்ற கொலை வெறியுடன், ஒன்று அல்ல இரண்டு அல்ல பத்துக்கும் மேற்பட்ட நாடுகளின் ஆயுத உதவி, இராணுவ உதவியுடன் ஒரு இனத்தை அழித்தும், சிதைத்தும், ஊனமுற்றவர்களை கனரக வாகனங்கள் கொண்டு மண்ணோடு சிதைத்திட்ட சிங்களவனிடம் கலாச்சாரம் பற்றி கேட்க முடியுமா???

போர் தொடங்கி இரண்டு ஆண்டுகள் ஆகியும் வாய் திறக்காத சர்வதேசத்தின் இழி நிலையினால் 2009ம் ஆண்டு தமிழீழ இனப் படுகொலையின் முடிவை அறிந்ததால் தான் தலைவர் பிரபாகரன் அவர்கள், போராடிய தமிழீழ மக்களை சரணடையச் சொன்னார். சர்வதேசத்தின் கள்ள மவுனமும், சர்வதேச அரசியலின் ஒட்டுமொத்த துரோகமும் தான் தலைவர் பிரபாகரனை மக்களை சரணடையும் முடிவுக்கு கொண்டு சென்றது. அழிந்துப் போகும் இயக்கத்தின் இரகசியங்களை யாரும் சொல்வதால் ஒன்றும் ஆகப் போவதில்லை என்பதை உணர்ந்தும் கூட சரணடையச் சொல்லியிருக்கலாம்.

ஐயா, விடுதலைப் புலிகள் தோற்கவில்லை, தோற்கடிக்கப்பட்டார்கள். அவர்களின் தோல்வியும் மதிப்பானதே. தமிழீழ கனவோடு போராடி உயிர் நீத்த போராளிகளின் மரணத்தையும் வீரத்தையும் தியாகத்தையும் கொச்சைப் படுத்தாது, முடிந்தால் தமிழன் என்ற உணர்வோடு அவர்களை மதித்து, தமிழீழ மக்களின் வாழ்விற்கான பாதையை நோக்கி செல்வோம்…. . சிங்களவர்கள் கூட செய்திராத நம் இனத்தின் போராளிகளின் வீரத்தையும், தியாகத்தையும் கொச்சைப்படுத்தும் வண்ணம் கேள்விகளைக் கேட்டு, போராடியதால் இன்று வெற்று உயிரோடு மண்ணில் இருக்கும் போராளிகளை நோகடிக்க வேண்டாம்

SHARE