உழவு இயந்திரத்துடன் மோதி இளைஞன் உயிரிழப்பு

125

 

உழவு இயந்திரத்துடன் மோதி இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் நேற்றிரவு (12.01.2024) வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி கோரியடி பகுதியில் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் உயிரிழந்தவர் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தில் பணியாற்றும் 31வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தை என தெரிவிக்கப்படுகின்றது.

மேலதிக விசாரணை
குறித்த நபர் பணி முடித்து வீடு திரும்பிச் சென்று கொண்டிருக்கும் வேளை இரவு 10.00 மணியளவில் மருதங்கேணி நோக்கிச் சென்று கொண்டிருந்த இராணுவ உழவு இயந்திரத்துடன் மோதியே விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில் சடலம் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மருதங்கேணி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

SHARE