போரில் உக்ரைன் மேற்கத்திய நாடுகளின் ஏவுகணைகளை பயன்படுத்தினால் அணு ஆயுதத்தை கையில் எடுப்போம் என ரஷ்யா பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளது.
ரஷ்யாவின் பாதுகாப்பு கவுன்சில் டிமிட்ரி தலைவர் மெத்வதேவ் இது தொடர்பாக கூறுகையில்,
” அமெரிக்கா வழங்கிய ஏவுகணைகளை உக்ரைன் பயன்படுத்த நினைக்கிறது. இதை தற்காப்பாக கருத முடியாது.
இருப்பினும், போரில் அணு ஆயுதத்தை ரஷ்யா பயன்படுத்துவதற்கான அடிப்படை விடயமாக இது அமையும்” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.