முகத்துவாரம் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் உயிரிழப்பு

102

 

முகத்துவாரம் ரந்திய உயன பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதே பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

துப்பாக்கிச் சூட்டில் பலத்த காயமடைந்த நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

முச்சக்கரவண்டியில் வருகை தந்த இருவர் துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் முகத்துவாரம் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

SHARE