கிராம சேவையாளர் உள்ளிட்ட இருவர் கைது

100

 

புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் கடமையாற்றும் கிராம சேவையாளர் உள்ளிட்ட போதைக்கு அடிமையான இருவர் புதுக்குடியிருப்பு பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

புதுக்குடியிருப்பு பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின்படி இன்றையதினம் (15.01.2024) கைது செய்யப்பட்டுள்ளனர்.

நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை
இதனையடுத்து சந்தேகநபர்கள் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்ட நிலையில் அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட போதை பாவனை தொடர்பான மருத்துவ பரிசோதனையின் போது குறித்த இரு நபர்களின் கிராம சேவையாளர் ஐஸ்,ஹெரோயின் போதைப்பொருள் பாவித்துள்ளமை தெரியவந்துள்ளதுடன் மற்றையநபர் ஹெரோயினுக்கு அடிமையானவர் என தெரியவந்துள்ளது.

38 வயதுடைய கிராம சேவையாளர் மற்றும் 27 வயதுடைய மற்றைய நபர் ஆகியோர் புதுக்குடியிருப்பு பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள்.

குறித்த நபர்களை நாளை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தும் சட்ட நடவடிக்கையில் புதுக்குடியிருப்பு பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.

SHARE