இளவாலையில் திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய நபரொருவர் கைக்குண்டுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேகநபரிடம் முன்னெடுத்த விசாரணைகளின் அடிப்படையில் மேலும் ஒரு சந்தேகநபர் சான்று பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது, நேற்று ஞாயிற்றுக்கிழமை (14) திருட்டு வழக்குகளில் தலைமறைவாகியிருந்த இளவாலை நாதவோலை பகுதியினை சேர்ந்த 37 வயதான நபரை கைது செய்ய சென்றபோது சந்தேக நபரிடம் இருந்து கைக்குண்டு மற்றும் கத்தி என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
பொலிஸார் விசாரணை
குறித்த சந்தேநபரை கைது செய்த பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.