தொடர் தோல்வியால் வெளியேறிய அணி! விரக்தியால் கத்திய மேக்ஸ்வெல்

118

 

பிக்பாஷ் லீக் தொடரில் கிளென் மேக்ஸ்வெல் தலைமையிலான மெல்போர்ன் ஸ்டார்ஸ் வெளியேறியது.

மேத்யூ வேட் அதிரடி ஆட்டம்
இன்று நடந்த பிக்பாஷ் லீக் தொடரின் 38வது போட்டியில், ஹோபர்ட் ஹரிக்கேன்ஸ் மற்றும் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிகள் மோதின.

முதலில் ஆடிய ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணி 187 ஓட்டங்கள் குவித்தது. மேத்யூ வேட் 63 ஓட்டங்களும், பென் மெக்டெர்மாட் 50 ஓட்டங்களும் விளாசினர்.

விரக்தியடைந்த மேக்ஸ்வெல்
அதனைத் தொடர்ந்து மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி களமிறங்கியது. தொடக்க வீரர்கள் சொதப்பிய நிலையில், கேப்டன் கிளென் மேக்ஸ்வெல் அதிரடியாக பவுண்டரிகளை விரட்டினார். அவர் 18 பந்துகளில் 32 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது எல்லிஸ் பந்துவீச்சில் போல்டு ஆனார்.

இதனால் அவர் கடும் விரக்தியடைந்து கத்தினார். பின்னர் மார்கஸ் ஸ்டோய்னிஸ் மற்றும் பியூ வெப்ஸ்டர் இருவரும் ருத்ர தாண்டவம் ஆடினர்.

ஸ்டோய்னிஸ்
அரைசதம் நோக்கி சென்ற ஸ்டோய்னிஸ் 48 (32) ஓட்டங்களில் இருந்தபோது கிறிஸ் ஜோர்டன் ஓவரில் ஆட்டமிழந்தார்.

எனினும் அரைசதம் விளாசிய வெப்ஸ்டர் இறுதிவரை போராடினார். ஆனாலும் மெல்போர்ன் அணி 180 ஓட்டங்களே எடுத்ததால் 7 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியுற்றது.

இறுதிவரை களத்தில் இருந்த வெப்ஸ்டர் 43 பந்துகளில் 2 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 55 ஓட்டங்கள் எடுத்தார். மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி 10 போட்டிகளில் 4 வெற்றிகளை மட்டுமே பெற்றதால், தொடரை விட்டு வெளியேறியது.

SHARE