பிக்பாஷ் லீக்கில் மெல்போர்ன் ரெனெகேட்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணியை வீழ்த்தியது.
குறைந்த இலக்கு
Docklands மைதானத்தில் நடந்த பிக்பாஷ் லீக் தொடர் போட்டியில் மெல்போர்ன் ரெனெகேட்ஸ் மற்றும் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிகள் மோதின.
முதலில் ஆடிய மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 137 ஓட்டங்கள் எடுத்தது. கார்ட் ரைட் 30 பந்துகளில் 38 ஓட்டங்களும், வெப்ஸ்டர் 34 பந்துகளில் 29 ஓட்டங்களும், கேப்டன் மேக்ஸ்வெல் 10 பந்தில் 20 ஓட்டங்களும் எடுத்தனர்.
மெல்போர்ன் ரெனெகேட்ஸ் தரப்பில் கேன் ரிச்சர்ட்சன், அகேல் ஹொசெய்ன் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
ஜேக் ஃபிரேசர் அதிரடி
அதனைத் தொடர்ந்து ரெனெகேட்ஸ் அணி தனது இன்னிங்க்ஸை தொடங்கியது. ஆரோன் பின்ச் தான் சந்தித்த 3வது பந்திலேயே ஜோயல் பாரிஸ் ஓவரில் டக் அவுட் ஆனார்.
அடுத்து களமிறங்கிய ஜேக் ஃபிரேசர் அதிரடியில் மிரட்டினார். அவருடன் அனுபவ வீரர் ஷான் மார்ஷ் பவுண்டரிகளை விரட்டினார்.
ஜேக் ஃபிரேசர் 31 பந்துகளில் 2 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 42 ஓட்டங்கள் விளாசிய நிலையில் கால்டர்-நைல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
ஷான் மார்ஷ் அரைசதம்
அதன் பின்னர் களமிறங்கிய ஜோர்டான் கோஸ் (4), வில் சதர்லாண்ட் (10) சொற்ப ஓட்டங்களில் வெளியேறினாலும், ஷான் மார்ஷ் அரைசதம் விளாசினார்.
அவர் ஆட்டமிழக்காமல் 49 பந்துகளில் 10 பவுண்டரிகளுடன் 64 ஓட்டங்கள் விளாசினார். இதன்மூலம் மெல்போர்ன் ரெனெகேட்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
40 வயதாகும் ஷான் மார்ஷ் (Shaun Marsh) 2023ஆம் ஆண்டு முதல்தர கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். எனினும் அவர் BBL (பிக்பாஷ் லீக்) தொடரில் விளையாடி வருகிறார்.