புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட தேவிபுரம் முள்ளுக்காடு வயல் வெளிப்பகுதியில் இருந்து வயோதிப பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் இன்று (16.01.2024) இடம்பெற்றுள்ளது.
தேவிபுரம் பகுதியினை சேர்ந்த மார்கண்டு பாக்கியம் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணை
இவரது உயிரிழப்பு தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதை தொடர்ந்து புதுக்குடியிருப்பு பொலிஸார் சம்பவம் இடத்திற்கு சென்று சடலத்தினை மீட்டுள்ளார்கள்.
உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றார்கள்.