படுகொலை செய்த சம்பவம் தொடர்பில் கொழும்பு, வாழைத்தோட்டத்தை சேர்ந்த நான்கு பேர் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த கொலை சம்பவம் கடந்த டிசம்பர் மாதம் 30 ஆம் திகதி இடம்பெற்றுள்ளது.
போதைப்பொருள் வியாபாரி ஒருவரைப் பற்றி பொலிஸாருக்கு தகவல் வழங்கியதற்குப் பழிவாங்கும் நடவடிக்கையாக இந்தக் கொலை நடந்திருக்கலாம் என ஆரம்பகட்ட விசாரணைகள் தெரிவிக்கின்றன.
தொடர் விசாரணை
இவ்வாறு கைது செய்யப்பட்ட நான்கு பேரும் வாழைத்தோட்டப் பிரதேசத்தில் வசிப்பவர்கள் என அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.