நடிகை மாளவிகா மோகனன் நடிக்க வருவதற்கு முன் எப்படி இருக்கிறார் பாருங்க

110

 

தமிழ, மலையாளம், கன்னடம், ஹிந்தி எனபல்வேறு மொழிகளில் நடித்து வருகிறார் மாளவிகா மோகனன். இவர் தமிழில் ரஜினியின் பேட்ட படத்தின் மூலம் அறிமுகமானார்.

இதன்பின் விஜய்யுடன் ஜோடி சேர்ந்து மாஸ்டர் படத்தில் நடித்தார். இதுதான் இவருக்கு கதாநாயகியாக தமிழில் முதல் திரைப்படமாகும். விஜய்யை தொடர்ந்து தனுஷுடன் இணைந்து மாறன் எனும் திரைப்படத்தில் நடித்தார். இப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றிபெறவில்லை.

மேலும் தற்போது பா. ரஞ்சித் இயக்கத்தில் வித்தியாசமான கதைக்களத்தில் விக்ரம் நடித்துள்ள தங்கலான் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

இப்படத்திலிருந்து வெளிவந்த மாளவிகாவின் லுக் மிரட்டலாக இருந்தது. இப்படத்திற்காக சிலம்பம் கூட மாளவிகா கற்றுக்கொண்டுள்ளார்.

நடிக்க வருவதற்கு முன்
இந்தியளவில் பிரபலமான நடிகையாக இருக்கும் மாளவிகா மோகனன் நடிக்க வருவதற்கு முன் எடுத்த வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. நடிப்பை கற்றுக்கொள்ள பிரபல நடிப்பு பட்டறை ஒன்றில் கலந்துகொண்டுள்ளார்.

அப்போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று தான் தற்போது வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்க்கும் நெட்டிசன்கள் பலரும், நம்ம மாளவிகா மோகனனா இது? ஆள் அடையாளமே தெரியவில்லையே என கேட்டு வருகிறார்கள்.

SHARE