அதிக முறை டக் அவுட்…, T20 சர்வதேச கிரிக்கெட்டில் மோசமான சாதனை படைத்த ரோஹித் சர்மா

124

 

T20 சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு மோசமான சாதனையை கிரிக்கெட் வீரர் ரோஹித் சர்மா படைத்துள்ளார்.

டக் அவுட்
இந்தூரில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 போட்டியில் ஒரு ரன் கூட எடுக்காமல் ரோஹித் சர்மா டக் அவுட் ஆனார். ஆப்கானிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் பசல்ஹக் பரூக்கி வீசிய முதல் ஓவர், முதல் பந்திலேயே ரோஹித் அவுட் ஆனார்.

இந்த தொடரின் முதல் போட்டியிலேயே, மொஹாலி டி20 போட்டியில் இதே போல ரோஹித் சர்மா பூஜ்ஜியத்தில் அவுட் ஆனார். ஒரு ரன் கூட எடுக்காமல் திரும்ப திரும்ப ரோஹித் சர்மா அவுட் ஆனதால் ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர்.

இதனால், ரோஹித் சர்மா டி20 சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு மோசமான சாதனையை படைத்துள்ளார். அதாவது, அதிகமான முறை டக் அவுட்டில் வெளியேறிய சாதனை ஆகும்.

இரண்டாவது இடத்தில்…
இதுவரை நடந்த டி20 சர்வதேச போட்டிகளில் ரோஹித் சர்மா இதுவரை 12 முறை பூஜ்ஜியத்தில் அவுட் ஆகியுள்ளார். அதிக முறை பூஜ்ஜியத்தில் பெவிலியன் திரும்பியதன் அடிப்படையில் ரோஹித் சர்மா தற்போது இரண்டாவது இடத்தில் உள்ளார்.

முதலாம் இடத்தில் அயர்லாந்து வீரர் பால ஸ்டிர்லிங் உள்ளார். அவர், 13 முறை பூஜ்ஜியத்தில் அவுட் ஆகியுள்ளார். இனி வருகின்ற டி20 சர்வதேச போட்டியில் ஒருமுறை ரோஹித் சர்மா அவுட் ஆனால் பால ஸ்ட்ரிங்கை சமன் செய்வார்.

SHARE