23 வயது வீரரை நூலிழையில் வீழ்த்தி பிபா விருதை வென்ற மெஸ்ஸி!

113

 

கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி 2023 ஆம் ஆண்டுக்கான சிறந்த வீரர் விருதை வென்றுள்ளார்.

48 புள்ளிகள்
லண்டனில் 2023 ஆம் ஆண்டுக்கான பிபா-வின் சிறந்த விருதுகள் விழா நடந்தது. இதில் சிறந்த வீரர் விருதை பெறுபவர் யார் என்பதில் மெஸ்ஸிக்கும், எர்லிங் ஹாலண்ட்கும் இடையே கடும் போட்டி நிலவியது.

இருவருமே 48 புள்ளிகள் பெற்றிருந்தனர். ஆனால், அதிக தேசிய அணியின் கேப்டன்கள் மெஸ்ஸிக்கு வாக்களித்ததால் அவர் விருத்தினைத் தட்டிச் சென்றார்.

மூன்றாவது முறை
கடந்த நான்கு ஆண்டுகளில் அவர் மூன்றாவது முறையாக இந்த விருதை பெற்றுள்ளார். சிறந்த அணியின் மேலாளர் விருதை மான்செஸ்டர் சிட்டியின் பெப் கார்டியோலா வென்றார்.

சிறந்த கோல் கீப்பர் விருதை மான்செஸ்டர் சிட்டியின் எடர்சன் வென்றார். சிறந்த வீராங்கனை விருதை ஸ்பானிஷின் Aitana Bonmati வென்றார்.

SHARE