அரசாங்கத்திற்கு எதிராக வீதிக்கிறங்கிய பல்கலைக்கழக மாணவர்கள்

101

 

கல்வி நலன் சார்ந்த பிரச்சனைகளையும் உடனடியாக தீர்க்க கோரி கொழும்பு பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கொழும்பு பல்கலைக்கழக மாணவர்களின் கல்வி மற்றும் கல்வி சாரப் பிரச்சினைகளை வலியுறுத்தியே குறித்த ஆர்ப்பாட்டம் இன்று முன்னெடுக்கப்படுகிறது.

பேராசிரியர் பற்றாக்குறைக்கு உடனடி தீர்வு வேண்டும், வாழ்க்கைச் செலவுக்கு ஏற்றவாறு மஹாபொல மற்றும் ஏனைய சலுகைகள் உயர்த்தப்பட வேண்டும் என பல்வேறு கோரிக்கைகள் மாணவர்களால் முன்வைக்கப்பட்டுள்ளன.

SHARE