மோட்டார் சைக்கிள் லொறியுடன் மோதியதில் பாடசாலை மாணவர்உயிரிழப்பு

114

 

மோட்டார் சைக்கிள் லொறியுடன் மோதியதில் பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்து நேற்று 17ஆம் திகதி இரவு 09.30 மணியளவில் மதுரங்குளிய, விருதோடை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

மதுரங்குளிய, விருதோடை பகுதியைச் சேர்ந்த 15 வயதுடைய பாடசாலை மாணவனே விபத்தில் உயிரிழந்துள்ளார்.

பொலிஸார் மேலதிக விசாரணை
இந்த விபத்திற்குள்ளான மோட்டார் சைக்கிள் பதிவு செய்யப்படவில்லை எனவும், விபத்து இடம்பெற்ற போது மோட்டார் சைக்கிளின் விளக்குகள் இயங்கவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்போது படுகாயமடைந்த பாடசாலை மாணவர் சிகிச்சைக்காக புத்தளம் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து சம்பவம் தொடர்பில் மதுரங்குளிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

SHARE