தங்கச்சங்கிலி அபகரிப்பு: சந்தேகநபரை மடக்கிப்பிடித்த இளைஞருக்கு பாராட்டு

93

 

தங்கச் சங்கிலியை அபகரித்துச் சென்ற இருவரை மடக்கிப்பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்த முச்சக்கர வண்டி சாரதியை பொலிஸார் பாராட்டியுள்ளனர்.

இந்த சம்பவம் வியாழக்கிழமை (18) இடம்பெற்றுள்ளது.

பெண்ணொருவர் வீதியால் பயணித்துக்கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் குறித்த பெண்ணை வழிமறித்து அவரிடமிருந்த தங்கச்சங்கிலியை அபகரித்துக்கொண்டு தப்பியோடியுள்ளனர்.

பொலிஸார் பாராட்டு
இதன்போது குறித்த வீதியால் மீரிகம நகரை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த முச்சக்கர வண்டி சாரதியொருவர், மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்றவர்களை தப்பிச்செல்லவிடாது வழிமறித்துள்ளார்.

இதனையடுத்து தப்பிச்சென்ற இருவரையும் முச்சக்கர வண்டி சாரதி பொதுமக்களின் உதவியுடன் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளார்.

இந்த செயலை பாராட்டும் முகமாக குறித்த முச்சக்கர வண்டி சாரதிக்கு பண பரிசில்களை வழங்கி பொலிஸார் பாராட்டியுள்ளனர்.

SHARE