விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா திருமணம்.. மனம் திறந்த நடிகர்

108

 

நடிகை ராஷ்மிகா இந்தியளவில் முன்னணி நடிகையாக வளர்ந்துவிட்டார். இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என தொடர்ந்து பல்வேறு மொழிகளில் நடித்து வரும் ராஷ்மிகாவிற்கு திருமணம் என தகவல் வெளிவந்தது.

தன்னுடைய நீண்ட நாள் காதலரான நடிகர் விஜய் தேவரகொண்டாவை தான் நடிகை ராஷ்மிகா கரம்பிடிக்க போகிறார் என்றும், அடுத்த மாதம் இவர்களுடைய நிச்சயதார்த்தம் நிகழவிருக்கிறது என்றும் பேசப்பட்டு வந்தது.

மனம் திறந்த நடிகர்
ஆனால், தற்போது இந்த விஷயம் குறித்து நடிகர் விஜய் தேவரகொண்டா மனம்திறந்து பேசியுள்ளார்.

அவர் கூறியதில் “நடிகை ராஷ்மிகாவிற்கும் எனக்கும் திருமணம் என வெளிவரும் செய்திகள் எதுவும் உண்மை இல்லை. நான் 2 வருடங்களுக்கு ஒரு முறை திருமணம் செய்துகொள்கிறேன் என ஊடகங்கள் நினைக்கின்றன. இது போன்ற வதந்திகள் மூலம் என்ன திருமணம் செய்யும்படி வற்புறுத்து கின்றனர்”. என விஜய் தேவரகொண்டா பேசியுள்ளார்.

இதன்மூலம் விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா திருமண வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

SHARE