9 விக்கெட்டுகள் கைப்பற்றிய பவுலர்! 26 ரன் இலக்கை எட்டி வெற்றிவாகை சூடிய அவுஸ்திரேலியா

122

 

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியை, 10 விக்கெட் வித்தியாசத்தில் அவுஸ்திரேலியா வென்றது.

அடிலெய்டில் நடந்த இப்போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் 188 ஓட்டங்களும், அவுஸ்திரேலியா 283 ஓட்டங்களும் எடுத்தன.

பின்னர் இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 120 ஓட்டங்களுக்கு சுருண்டது. ஹேசல்வுட் 5 விக்கெட்டுகளை சாய்த்தார்.

இதனைத் தொடர்ந்து வெறும் 26 ஓட்டங்கள் இலக்கினை நோக்கி களமிறங்கிய அவுஸ்திரேலியா 7வது ஓவரில் வெற்றி பெற்றது.

முதல் இன்னிங்சில் 4 விக்கெட்டுகளும், 2வது இன்னிங்சில் 5 விக்கெட்டுகளும் என ஹேசல்வுட் 9 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இது டெஸ்டில் அவரது சிறந்த பந்துவீச்சு ஆகும்.

SHARE