கூட்டமைப்பின் தலைவரை சந்தித்த தமிழரசுக் கட்சியின் புதிய தலைவர்

105

 

தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனை சந்தித்து ஆசிர்வாதம் பெற்றுள்ளார்.

திருகோணமலை நகராட்சி மன்ற கேட்போர் கூடத்தில் நேற்று (21.01.2024) இடம்பெற்ற கூட்டத்தில் தமிழரசுக் கட்சியின் புதிய தலைவருக்கான வாக்கெடுப்பு இடம்பெற்றிருந்தது.

இதன்போது 47 மேலதிக வாக்குகளினால் சிறீதரன் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இந்த நிலையிலேயே அவர் சம்பந்தனை சந்தித்துள்ள புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

SHARE