சுதுமலைப் பொது சுகாதாரப் பரிசோதகர் பிரிவில் டெங்குக் கட்டுப்பாட்டுப் பணிகள் தீவிரமாக்கப்பட்டுள்ளன.
சுதுமலைப் பகுதுயில், கடந்த வாரம் 21 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதோடு அதில் 13 பேர் 10 வயதிற்குட்பட்டோர் ஆவர்.
இதன்படி, புதிதாக இடமாற்றம் பெற்று கடமையைப் பொறுப்பேற்ற பொது சுகாதாரப் பரிசோதகர் ம.ஜெயபிரதீப் தலமையில் கிராம சேவேயாளர்கள் டெங்குத் தடுப்பு உத்தியோகத்தர்கள் இணைந்து வீட்டு சுத்திகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
நீதிமன்றில் வழக்குத்தாக்கல்
அதன்படி, இதுவரை 23 பேருக்கு அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளதுடன் நுளம்புக்குடம்பிகள் பரவும் வகையில் சூழலை வைத்திருந்த 4 பேருக்கு நீதிமன்றில் வழக்குத்தாக்கல் செய்யப்பட்டு 4500 ரூபா தண்டப்பணமும் அறவிடப்பட்டுள்ளது.