தமிழ் திரையுலகில் வில்லன் என்று நாம் பட்டியல் எடுத்தால், அதில் டாப் 10 நடிகர்களில் ஒருவராக ஆனந்த்ராஜ் இருப்பார். ரஜினிகாந்த், சரத்குமார், விஜயகாந்த் என பல முன்னணி நட்சத்திரங்களுக்கு வில்லனாக நடித்துள்ளார்.
90ஸ் கிட்ஸ் மத்தியில் வில்லனாக மிரட்டிய ஆனந்த்ராஜ், இன்று 2K கிட்ஸ் மத்தியில் நகைச்சுவை நடிகராக கலக்கி வருகிறார். நானும் ரவுடி தான், மரகத நாணயம், தில்லுக்கு துட்டு, ஜாக்பாட், கான்ஜுரிங் கண்ணப்பன், ஆகிய படங்களில் நகைச்சுவையில் பட்டையை கிளப்பினார்.
ஆனந்தராஜின் குடும்பம்
தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய அளவில் பல திரையுலகில் நடித்துள்ளார். தனது திரை வாழ்க்கையில் முதல் பாதி வில்லனாகவும், இரண்டாம் பாதியில் நகைச்சுவை நடிகராகவும் கலக்கி வரும் ஆனந்தராஜின் குடும்ப புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.
நடிகர் ஆனந்த் ராஜ் தனது மனைவி மற்றும் பிள்ளைகளுடன் எடுத்துக்கொண்ட இந்த அழகிய குடும்ப புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.