IND Vs ENG Test தொடரில் விராட் கோலி இல்லாதது நல்ல விடயம் தான்: ராகுல் ட்ராவிட் சொன்னது என்ன?

146

 

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விராட் கோலி போன்ற தரமான வீரரை இழந்தது பின்னடைவு தான் என்று ராகுல் ட்ராவிட் கூறியுள்ளார்.

IND Vs ENG Test தொடர்
இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.

அதன்படி, ஜனவரி 25 -ம் திகதி ஹைதராபாத் நகரில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் முதல் டெஸ்ட் போட்டி தொடங்குகிறது. இந்த தொடரானது மார்ச் 11 -ம் திகதி வரை நடைபெற இருக்கிறது. இந்த தொடர் மீது ரசிகர்களுக்கு மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது.

இந்நிலையில், முதல் இரண்டு போட்டிகளில் இருந்து விராட் கோலி விலகியுள்ளார். அவருக்கு பதில் எந்த வீரர் களமிறக்கப்படுவார் என்ற ஆர்வமும் ரசிகர்களுக்கு உள்ளது.

ராகுல் ட்ராவிட் கூறியது
இதில் விராட் கோலியின் விலகல் குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரரும், தற்போதைய பயிற்சியாளருமான Rahul Dravid கருத்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பேசிய அவர், “விராட் கோலி போன்ற தரமான வீரரை இந்திய அணி இழந்தது சற்று பின்னடைவு தான். ஆனால், அவர் அணியில் இல்லாததும் ஒரு நல்ல விடயம் தான்.

இதனால் அவருக்கு பதிலாக வேறு யாரையாவது அந்த இடத்தில் பயன்படுத்தி அவர்களுடைய செயல்பாட்டை முன்னேற்றுவதற்கு இந்த போட்டி தொடர் உதவியாக இருக்கும். அப்படி பார்த்தால் அவரது இடத்தில் வேறு ஒருவர் விளையாடி அந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன்” என்றார்.

 

SHARE