புதிய அரசாங்கத்தின் அமைச்சர்களுக்கான பதவிப் பிரமாண நிகழ்வு எதிர்வரும் 27ம் வரை பிற்போடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போதைய நிலையில் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே அமைச்சுப் பதவியை பகிர்ந்து கொள்வது தொடர்பாக இணக்கப்பாடு எட்டப்படாமை காரணமாகவே பதவிப் பிரமாண நிகழ்வு பிற்போடப்பட்டுள்ளது.
இந்நிலையில் வரும் 27ம்திகதி ஒரு தொகை அமைச்சர்களும், அதற்கடுத்த தொகுதி அமைச்சர்கள் 28ம் திகதியும் பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளனர்.
நாடாளுமன்றம் கூடிய பின்னர் நாடாளுமன்ற அனுமதியுடன் அமைச்சர்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொள்ளப்படவுள்ளது.
அதன் பின்னர் மூன்றாவது தொகுதி அமைச்சர்களின் பதவிப் பிரமாண நிகழ்வு செப்டம்பர் முதலாம் வாரத்தில் நடைபெறவுள்ளது.
இரண்டாம் இணைப்பு
தேசிய அரசாங்கத்தில் அமைச்சரவையில் பொருள் சுற்றரிக்கைகள் ஒதுக்கிகொள்ளும் நடவடிக்கைகள் பல நிறைவடைந்துள்ளன.
ஜனாபதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க ஆகியோரின் தலைமைத்துவத்தில் இது தொடர்பிலான நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது.
இன்றைய தினம் தேசிய அரசாங்கத்தின் அமைச்சர் பதவிகளின் பொருள் சுற்றரிக்கைகள் ஒதுக்கிக்கொள்வது தொடர்பில் விசேட கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அமைச்சரவை பிரமாண நிகழ்வுகளை இன்று காலை நடத்துவதற்கு இதற்கு முன்னர் தீர்மானிக்கப்பட்டிருந்தன.
எப்படியிருப்பினும் பொருள் சுற்றறிக்கைகள் ஒதுக்கிகொள்ளல் மற்றும் பல காரணங்கள் தொடர்பில் மேலும் கலந்துரையாடல் மேற்கொள்ள வேண்டும் என்பதனால் பதவி பிரமாண நடவடிக்கைகள் 27ஆம் திகதி வரை பிற்போடப்பட்டுள்ளது.