நிஷாந்தவின் இறுதிக்கிரியை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் தகவல்

110

 

இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் இறுதிக் கிரியைகள் எதிர்வரும் 28ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளன.

குறித்த தகவலை நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த மற்றும் அவரது பாதுகாப்பு உத்தியோகத்தர் இன்று (25) காலை கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்துள்ளனர்.

பெருமளவு அரசியல்வாதிகள்
இந்நிலையில், உயிரிழந்த சனத் நிஷாந்தவின் இறுதிக் கிரியைகளை ஆராச்சிக்கட்டுவ பிரதேசத்தில் நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

சனத் நிஷாந்தவின் பூதவுடல் இன்று (25.1.2024) மாலை 5.30 மணியளவில் பொரளை ஜயரத்ன மலர்ச்சாலையில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு நாளை (26.1.2024) காலை 10.30 மணியளவில் புத்தளத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

சனத் நிஷங்கவின் சடலம் ராகம வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்த நிலையில், காலையில் இருந்து பெருமளவு அரசியல்வாதிகள் வைத்தியசாலையில் கூடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

SHARE