நெடுஞ்சாலைகளில் விபத்துக்கள் ஏற்படுவதற்கான காரணத்தை வெளியிட்ட அமைச்சர்

98

 

போக்குவரத்து விதிகளை மதிக்காமையே அதிவேக நெடுஞ்சாலைகளில் அதிகளவில் விபத்துக்கள் ஏற்படுவதற்கான காரணம் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அதிவேக நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து விதி மீறல்களில் ஈடுபடும் சாரதிகளுக்கு எதிராக அடுத்த வாரம் முதல் விசேட நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கட்டுநாயக்க முதல் கொழும்பு வரையிலான அதிவேக நெடுஞ்சாலையில் மின் விளக்குகளை பொருத்தும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

அண்மையில் கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற இரு வேறு விபத்துக்களில் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த, அவரது மெய்ப்பாதுகாவலர் மற்றும் வெளி நாட்டுப்பிரஜை ஒருவர் உயிரிழந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

SHARE