கோர விபத்து: மூவர் ஸ்தலத்தில் பலி

88

 

குருணாகலில் இன்று காலையில் ஏற்பட்ட வீதி விபத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நாரம்மல – கிரியுல்ல பிரதான வீதியில் கிவுல்கல்ல வளைவுக்கு அருகில் விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தில் காயமடைந்த மற்றுமொரு குருநாகல் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முச்சக்கர வண்டியொன்று லொறியுடன் மோதியதில் விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

முச்சக்கரவண்டியில் நால்வர் பயணித்த நிலையில் மூவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE