ஐசிசி-யின் சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரராக இலங்கை வீராங்கனை தேர்வு: யார் அவர் தெரியுமா?

147

 

2023 ம் ஆண்டுக்கான சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீராங்கனையாக இலங்கை அணியின் கேப்டன் சமரி அத்தபத்து தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஐசிசி விருதுகள்
சர்வதேச கிரிக்கெட் பேரவையான ICC சமீபத்தில் 2023ம் ஆண்டின் சிறந்த வீரர்களுக்கான விருதை அறிவித்து இருந்தது.

இதில், கடந்த ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி கேப்டன் சமரி அத்தபத்து-க்கு(Chamari Athapaththu) ஒருநாள் கிரிக்கெட்டின் சிறந்த வீராங்கனைக்கான விருதை ICC அறிவித்துள்ளது.

கிரிக்கெட்டில் சிறப்பான ஆட்டம்
சமரி அத்தபத்து கடந்த 2023ம் ஆண்டு 8 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 415 ஓட்டங்கள் குவித்துள்ளார்.

இவரை போலவே, சிறந்த வளர்ந்து வரும் வீராங்கனையாக அவுஸ்திரேலியாவின் போபியே சிட்டி ஹால் மற்றும் சிறந்த டி20 கிரிக்கெட் வீராங்கனையாக மேற்கிந்திய தீவுகளை சேர்ந்த ஹேலே மேத்யூஸும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

ஆடவர் கிரிக்கெட்டின் சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரராக இந்திய கிரிக்கெட் அணி வீரர் விராட் கோலியும், சிறந்த டெஸ்ட் வீரராக அவுஸ்திரேலிய வீரர் உஸ்மான் கவாஜாவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

SHARE