தமிழ் அரசியல் களம்! திடீரென கூட்டப்பட்ட அவசர கூட்டம்

114

 

தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாடு நாளைய தினம் இடம்பெறவுள்ள நிலையில் திடீரென இன்று மத்திய குழுக் கூட்டம் இடம்பெறுகின்றமை பேசுபொருளாகியுள்ளது.

தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாடு 2024ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 28ஆம் திகதி திருகோணமலையில் உள்ள தனியார் விடுதியில் இடம் பெறும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், மத்திய குழுக் கூட்டத்தை இன்று நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்த குழுவின் உறுப்பினர்களுக்கு குறித்த கூட்டத்தில் பங்கேற்பதற்கான அழைப்பு நேற்றிரவு விடுக்கப்பட்டுள்ளது.

கட்சியின் தலைமைப் பதவி
கடந்த 21 ஆம் திகதி தமிழரசுக் கட்சியின் புதிய தலைவருக்கான தேர்தல் இடம்பெற்றது. இதில் சிவஞானம் சிறீதரன் 184 வாக்குகளை பெற்று, தமிழரசுக் கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அதேவேளை, கட்சியின் தலைமைப் பதவியைப் சிறீதரன் தேசிய மாநாட்டில் பொறுப்பேற்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இரவு விடுக்கப்பட்ட அழைப்பு
இவ்வாறானதொரு பின்னணியில் இன்றைய தினம் பொதுக் குழுக் கூட்டத்துக்கு முன்பாக மத்திய குழுக் கூட்டம் நடைபெறுகின்றமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய குழு உறுப்பினர்களுக்கு மிகக் குறுகிய கால அவகாசத்தில் நேற்று இரவு அழைப்பு விடுக்கப்பட்டு இந்தக் கூட்டம் கூட்டப்படுகின்றமை அரசியல் வட்டாரங்களில் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

SHARE