மாவனல்லை நகரின் பிரதான வீதியில் அமைந்திருந்த சுமார் 30 வர்த்தக நிலையங்கள் தீக்கிரையாகி, பலத்த சேதமடைந்துள்ளன.
சேதங்கள்
தீப் பரவலை தடுக்க பிரதேசவாசிகள் கடுமையான முயற்சிகளை மேற்கொண்டிருந்த நிலையில், ஒருகட்டத்தில் பொலிஸாரும் அவர்களுடன் இணைந்து கொண்டிருந்தனர்.
எனினும் தீவிபத்தின் வீரியம் காரணமாக சுமார் 30 வரையான கடைகள் வரை தீ பரவி சேதம் ஏற்பட்டிருந்தது.
கடையொன்றில் ஏற்பட்ட மின் ஒழுக்கு காரணமாகவே இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று மாவனல்லை பொலிஸார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.