வாக்கெடுப்பின் மூலமாகத்தான் பொதுச் செயலாளர் பதவிக்குரிய நபரைத் தெரிவு செய்ய வேண்டும் என்பதை நாம் மிகவும் ஆணித்தரமாக கூறியுள்ளோம் என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் தெரிவித்துள்ளார்.
அவரது இல்லத்தில் இன்று (28.01.2024) மாலை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், “பொதுச் செயலாளர் தெரிவின் போது வாக்களிப்புக்கு அழைக்கப்படாதவர்கள், அங்கு உணவு பரிமாறியவர்கள் உள்ளிட்டோரும் இருந்துள்ளார்கள். ஆகவே அந்த வாக்களிப்பு உண்மையிலேயே ஏற்றுக் கொள்ள முடியாதிருந்தது.
எனவே மீண்டும் பொதுச் சபையின் வாக்கெடுப்பின் மூலமாகத்தான் பொதுச் செயலாளர் பதவிக்குரிய நபரைத் தெரிவு செய்ய வேண்டும் என்பதை நாம் மிகவும் ஆணித்தரமாக கூறியுள்ளோம்” என தெரிவித்துள்ளார்.