350 மாணவர்கள் அடங்கிய குழுவொன்று பல்கலைக்கழக நிர்வாக கட்டிடத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த முற்றுகைப் போராட்டம் நேற்று (29.1.2024) இரவு நடைபெற்றுள்ளது.
பிரதான வீதி முற்றாக தடை
இதன்போது மாணவர்களின் பல கோரிக்கைகளை முன்வைத்து பல்கலைக்கழகத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இதன்போது பொலிஸார் நீர் மற்றும் கண்ணீர் புகை தாக்குதலை மேற்கொண்டு போராட்டத்தைக் கலைத்துள்ளனர்.
இந்த போராட்டம் காரணமாக களனி பல்கலைக்கழகத்திற்கு முன்பாக கொழும்பில் இருந்து கண்டி செல்லும் பிரதான வீதி முற்றாக தடைப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.