மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணி: எஸ்.எம். மரிக்கார் வெளியிட்டுள்ள தகவல்

170

 

கொழும்பில் மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணியை நடத்தவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று (29.01.2024) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கத்தின் பல செயற்பாடுகள் மற்றும் வாழ்க்கைச் செலவுகளின் அதிகரிப்பு போன்றவற்றை மையப்படுத்தி இந்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

இடங்கள் மற்றும் நேரம்
இந்நிலையில், போராட்டம் இடம்பெறவுள்ள இடங்கள் மற்றும் நேரம் குறித்து இன்று அறிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

SHARE