ரொனால்டோ – மெஸ்ஸி மோதல் இல்லை! சோகத்தில் ரசிகர்கள்

112

 

இன்டர் மியாமி அணிக்கு எதிரான நாளைய போட்டியில், கிறிஸ்டியானோ ரொனால்டோ விளையாட மாட்டார் என வெளியான தகவல் அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

நட்புமுறை போட்டி
சவுதி அரேபியாவின் Kingdom Arena மைதானத்தில் நாளை நடைபெற உள்ள நட்புமுறை போட்டியில், மெஸ்ஸியின் இன்டர் மியாமி அணியும், ரொனால்டோவின் அல் நஸர் அணியும் மோதுகின்றன.

இரண்டு கால்பந்து ஜாம்பவான்கள் நேருக்கு நேர் மோதும் போட்டி என்பதால் ரசிகர்கள் இடையே பலத்த எதிர்பார்ப்பு நிலவியது.

ரொனால்டோ ரசிகர்களுக்கு அதிர்ச்சி
ஆனால், ரொனால்டோ ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் வெளியான தகவலால், சமூக வலைத்தளங்களில் தங்கள் சோகத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

அதாவது, நாளைய போட்டியில் ரொனால்டோ விளையாடமாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.

இடது காலில் ஏற்பட்ட காயத்தினால், சீனாவில் நடந்த சவுதி புரோ லீக் போட்டிகளில் ரொனால்டோ பங்கேற்காத நிலையில், இன்டர் மியாமி அணிக்கு எதிரான போட்டியில் விளையாட சரியான நேரத்தில் அவர் குணமாகவில்லை என கூறப்படுகிறது.

இந்த தகவலை அல் நஸர் அணி உறுதிப்படுத்தியதாக தெரிகிறது. இதன் காரணமாக ரொனால்டோவின் ரசிகர்கள் தங்கள் வருத்தத்தை ஒன்லைன் தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

SHARE