இளைஞனை காணவில்லை என பொலிஸில் முறைப்பாடு

86

 

27 வயதுடைய இளைஞனை காணவில்லை என பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் – இணுவில் தெற்கு பகுதியைச் சேர்ந்த குகதாசன் நீபஜன் எனும் இளைஞனே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.

பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு
குறித்த இளைஞனை கடந்த 26ம் திகதி முதல் காணவில்லை என சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

குறித்த நபரை கண்டவர்கள் பொலிஸ் நிலையத்திற்கு தகவல் வழங்குமாறு குடும்பத்தினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

SHARE