கனடாவில் வீடொன்றிலிருந்து மீட்கப்பட்ட 3 சடலங்கள்

108

 

கனடாவின் ரொறன்ரோ ரிச்மண்ட்ஹில் பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்றில் மூன்று சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

போலீசாருக்கு கிடைக்கப்பெற்ற தொலைபேசி அழைப்பு ஒன்றினைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.

இதன்போது குறித்த வீட்டில் மூன்று பேரின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இந்த சம்பவத்தில் உயிரிழந்திருப்பவர்கள் தொடர்பிலான எவ்வித தகவல்களும் இதுவரையில் வெளியிடப்படவில்லை.

உயிரிழந்தவர்கள் ஒருவருக்கு ஒருவர் உறவினர்களா என்பது பற்றிய விபரங்களும் கண்டறியப்படவில்லை.

சடலங்கள் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதன் பின்னரே மரணத்திற்கான காரணங்களை வெளியிட முடியும் என போலீசார் தெரிவிக்கின்றனர்.

இந்த சம்பவம் காரணமாக பொது மக்களுக்கு எவ்வித பாதிப்பும் கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

மெக்கேய் வீதி யாங் வீதி என்பனவற்றுக்கு அருகாமையில் அமைந்துள்ள வீடொன்றிலிருந்து சடலங்கள் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

SHARE