அசால்ட்டாக கோல் அடித்த எம்பாப்பே! கம்பீரமாக முதலிடத்தில் நீடிக்கும் PSG

114

 

பாரிஸ் செயிண்ட் ஜேர்மைன் அணி 2-1 என்ற கோல் கணக்கில் ஸ்ட்ராஸ்பர்க் அணியை வீழ்த்தியது.

எம்பாப்பே கோல்
Stade de la Meinau மைதானத்தில் நடந்த Ligue 1 போட்டியில் PSG மற்றும் Strasbourg அணிகள் மோதின. ஆட்டத்தின் 6வது நிமிடத்திலேயே PSG அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது.

ஆனால் நட்சத்திர வீரர் கைலியன் எம்பாப்பேவால் அதனை கோலாக மாற்ற முடியவில்லை. எனினும், 31வது நிமிடத்தில் PSGயின் நட்சத்திர வீரர் கைலியன் எம்பாப்பே அபாரமாக கோல் அடித்தார்.

அதனைத் தொடர்ந்து 49வது நிமிடத்தில் மார்கோ அசென்சியோ மூலம் PSG அணிக்கு இரண்டாவது கோல் கிடைத்தது.

PSG அணி வெற்றி
Strasbourg அணியின் கடுமையாக நெருக்கடி கொடுத்த நிலையில், 68வது நிமிடத்தில் அந்த அணியின் டிலானே பக்வா கோல் அடித்தார்.

இறுதியில் PSG 2-1 என்ற கோல் கணக்கில் Strasbourg அணியை வீழ்த்தியது. இது PSG அணிக்கு 14வது வெற்றி ஆகும்.

மேலும் 47 புள்ளிகளை பெற்று PSG முதலிடத்தில் நீடிக்கிறது. அதற்கு அடுத்த இடத்தில் 11 வெற்றிகளுடன் 38 புள்ளிகள் பெற்று Nice அணி உள்ளது.

SHARE