ஒக்டோபர் 14 ஆம் திகதி இலங்கையின் புதிய ஜனாதிபதி ஒருவர் நியமிக்கப்படுவார்-ஹரின்

92

 

ஒக்டோபர் முதல் வாரம் எவர் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் மீண்டும் ஒரு முறையாவது ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதியாக்கும் பொறுப்பு நாட்டு மக்களுக்கு வழங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நிகழ்வொன்றில் கலந்துகொண்டு நேற்று கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நாட்டின் புதிய ஜனாதிபதி
ஒரு நாட்டை மிகக் குறுகிய காலத்தில் வங்குரோத்து நிலையில் இருந்து காப்பாற்றிய உலகின் ஒரே தலைவர் ரணில் விக்ரமசிங்க எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

ரணில் விக்ரமசிங்க நோய்வாய்ப்பட்டவர்களைக் குணப்படுத்தும் சிறந்த வைத்தியர் என்றும், அவர் தயக்கம் காட்டினாலும் மக்கள் இன்னும் ஒரு சந்தர்ப்பத்தை அவருக்கு வழங்கி நாட்டின் ஜனாதிபதியாக நியமிக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் மூன்று விதமான தேர்தல்களில் வெற்றிபெற்ற குழுக்களில் 47 வீதமானவர்களைக் கண்டுபிடிப்பது கனவாகவே காணப்படுவதாகவும் அந்தக் கனவுகள் ஒருபோதும் நனவாகாது எனவும் ஹரின் பெர்னாண்டோ கூறியுள்ளார்.

SHARE