கஞ்சா பயிர்ச்செய்கையில் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு அனுமதி வழங்கும் அமைச்சரவைப் பத்திரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சுற்றுலா இராஜாங்க அமைச்சர் டயானா கமகே குறித்த அமைச்சரவைப் பத்திரத்தை நேற்று(05.02.2024) முன்வைத்திருந்தார்.
அமைச்சரவை அனுமதி
இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கான தீர்வுகளில் ஒன்றாக கஞ்சா வளர்ப்பு மற்றும் விலைமாதர் தொழிலை சட்டரீதியாக அங்கீகரிக்க வேண்டும் என்று டயானா கமகே நீண்ட காலமாக குரல் கொடுத்து வருகின்றார்.
இந்நிலையில் அவரது நீண்ட கால முயற்சியின் பலனாக கஞ்சா வளர்ப்பில் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்கு அமைச்சரவை நேற்று(05) அனுமதி வழங்கியுள்ளது.