பொதுஜன பெரமுனவின் நிலைப்பாடு குறித்து வெளியான தகவல்

103

 

கெஹெலிய ரம்புக்வெல விவகாரத்தில் சிறிலங்கா பொதுஜன பெரமுன அவருக்கு எதிராக எந்த நடவடிக்கைகளையும் எடுக்காது என கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

இதேவேளை தரம் குறைந்த இம்யுனோகுளோபிளின் மருந்தினை இறக்குமதி செய்த குற்றச்சாட்டில் கெஹெலிய ரம்புக்வெல கைதுசெய்யப்பட்டுள்ள நிலையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

குறித்த விவகாரம் நீதிமன்றத்தின் முன்னிலையில் உள்ளதால் இன்னமும் இறுதி தீர்ப்புகள் வெளியாகாததால் கெஹெலிய ரம்புக்வெலவிற்கு எதிராக சிறிலங்கா பொதுஜன பெரமுன எந்த நடவடிக்கையையும் எடுக்காது என சாகர காரியவசம் குறிப்பிட்டார்.

நீதிமன்றம் தீர்மானிக்க வேண்டும்
இந்த நிலையில் குறித்த விவகாரம் தற்போது நீதிமன்ற விவகாரமாக மாறியுள்ளதால் கட்சி எந்த நடவடிக்கையையும் எடுக்கவேண்டிய அவசியமில்லை எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

கெஹெலிய ரம்புக்வெல குற்றவாளியா இல்லை என்பதை நீதிமன்றம் தீர்மானிக்கவேண்டும் எனவும், அதுவரை கட்சி எதனையும் செய்ய முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கு முடிவிற்கு வரும்வரை நாங்கள் எந்த நடவடிக்கையையும் எடுக்கமாட்டோம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

SHARE